தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்கு மூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு காவற்துறையினர் அழைத்திருந்தனர்.
இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், முதல்வர் மணிவண்ணனை அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக என யாழ்.மாநகர சபை முதல்வரை வவுனியாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அதேவேளை உறுப்பினர் வ.பார்த்திபனிடம் சுமார் 08 மணி நேர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தினை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்