இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல்காரா்கள் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகின்ற நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13 போ் கைதாகியிருந்தனா்.
அத்துடன் 400 கிராம் போதைப்பொருளும் (மெத்தாம்பேட்டமைன்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பில் , மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அவா்கள் மீதான .அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளாா்.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு திட்டம் போட்டுக்கொடுத்த ஈரானியருக்கும் அவரது மனைவிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தண்டிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டு வழக்கப்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது