Home இலங்கைமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி விவசாயிகள் மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி விவசாயிகள் மூவர் உயிரிழப்பு!

by admin

முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

குமுழமுனை பகுதியை சேர்ந்த இருவரும் , வற்றாப்பளை பகுதியை சேர்ந்த ஒருவருமான மூன்று விவசாயிகளும் தண்ணீர் முறிப்பு பகுதியில் வயல் வேலைக்கு சென்றிருந்தனர்.

இரவாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில் , அவர்களது உறவினர்கள் அவர்களை தேடி சென்ற போது வயலில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். அது தொடர்பில் உறவினர்கள் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More