Home இலங்கை“ஜனாதிபதி தகாத வார்த்தையால் அச்சுறுத்தினார் – எனதும் குடும்பத்தினரதும் உயிர் குறித்து அச்சமடைந்துள்ளேன்!”

“ஜனாதிபதி தகாத வார்த்தையால் அச்சுறுத்தினார் – எனதும் குடும்பத்தினரதும் உயிர் குறித்து அச்சமடைந்துள்ளேன்!”

by admin

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் இதனைத் தொிவித்த அவர், கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் தான் தெரிவித்த கருத்துகளுக்காகவே ஜனாதிபதி இவ்வாறு தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அவா் தொிவித்துள்ளாா்.

நாடு ஒன்றின் தலைவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசுவார் என்பதனை தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே தான் பதிலளித்ததாக குறிப்பிட்ட விஜயதாச ராஜபக்ச, தற்போது தனதும் தனது குடும்பத்தவர்களினதும் உயிர் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More