Home பிரதான செய்திகள்ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

by admin

அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் தொடாின் 21ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியினை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்கிளன் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 124 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 16.4 ஓவா்களில் 126 ஓட்டங்களை எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது கொல்கத்தா பெற்ற இரண்டாவது வெற்றி என்பதுடன் பஞ்சாப் அணி பெற்ற நான்காவது தோல்வியாகும்.

இன்றையதினம் நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் போட்டியிடவுள்ளன.தலா நான்கு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ள இரு அணிகளும் ஐந்தாவது வெற்றியை பெற கடுமையாகப் போராடும் என எதிா்பாா்க்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More