Home இலங்கை பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4000 ரூபா அதிகரிப்பு

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4000 ரூபா அதிகரிப்பு

by admin

மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு தற்போது கொடுக்கபடும் 6.000 ரூபாவுடன் மேலும் 4.000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10.000 ரூபாவாக வழங்க நடவடிக்கை மேற் கொள்ளபட்டடுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான 05 ஆம் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (01) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதன் போது 5 வது கட்டமாக ஒரு தொகை பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கபட்டது. எஞ்சியுள்ள 331 பேருக்கும் நியமனம் பெற்று தொழிலுக்கு செல்லாவர்களின் வெற்றிடத்திற்கும் ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கபட உள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்;; கொடுப்பனவை அதிகரிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  விடுத்த  வேண்டுகோளுக்கு அமைய மேற் கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொடுக்கபடும் 6.000 ரூபாவுடன் மேலும் 4.000 ரூபா அதிகரிப்பை ஏற்படுத்தி 10.000 ரூபாவாக வழங்க நடவடிக்கை மேற் கொள்ளபட்டடுள்ளது எனவும் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது  எனவும் அதற்கான நடவடிக்கைள் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும்  இதற்கு சம்பள நிர்னைய அதிகார சபையின் அனுமதி¸ நிதி அமைச்சின் அனுமதி போன்றவை எடுக்க வேண்டும் அவையும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அவை அனைத்தும் நடைபெற்றதும் குறுகிய காலத்தில் இவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும எனத் தெரிவித்தார்.

இந்த கொடுப்பனவு பிரச்சனை பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு மாத்திரம் அல்ல சிங்கள மொழி மூலமான ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் பெருநந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரித்தல் குறித்து விசனம் தெரிவிக்க வேண்டியுள்ளது எனவும்   இவர்களின் கொடுப்பனவு உரிய காலத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்க் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More