குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டடம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக அதிகரித்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சருக்கு இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குமாறு அறிவித்தல் கிடைத்துள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.
இன்றைய தினம் வட்டக்கச்சி நிகழ்வில் முதலமைச்சரின் பிரத்தியேக பாதுகாப்பு காவல்துறையினரை விட சுமார் 25இற்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் ரி56 ரக துப்பாக்கியுடனும், ஆயுதங்கள் இன்றி 15இற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்களும் குறித்த வளாகத்திலும் வளாகத்தை சூழவும் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனா்.
கிளிநொச்சியில் இதுவரை முதலமைச்சா் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் இன்றைய நிகழ்வுக்கே அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.