அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ள இந்த பயணத்தடை அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது எனவும் தொிவித்துள்ளாா்.
இதேவேளை நாட்டின் நிலமையை கருத்திற்கொண்டு மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.