இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் யிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்,சீரற்ற வானிலை காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகல கந்த மற்றும் வரக்காபொல அல்கம கந்த என்ற இடங்களில் நேற்று (05) இடம்பெற்ற மண் சரிவுகள் காரணமாக 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையினால் 10 பேர் உயிாிழப்பு
June 5, 2021 6:31 pm
இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ள நிலையில் அதன் காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வௌ்ளப்பெருக்கினால் 10 பேர் உயிாிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீரற்ற காலநிலையினால் இதுவரையிலும் 219,027பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நிலையம் தொிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அ னர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொிவித்துள்ளது.