பாகிஸ்தானில் இரண்டு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 30க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதுடன் பலா் காயமடைந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய புகையிரதங்களே இன்று அதிகாலையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிாிழப்புகளின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தொிவித்துள்ள அதிகாரிகள் பெட்டிகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தொிவித்துள்ளனா்.