Home இலங்கைதப்பிக்க முயற்சித்தவர் மரணமாம் – இரு காவற்துறைனர் பணி இடைநீக்கம்!

தப்பிக்க முயற்சித்தவர் மரணமாம் – இரு காவற்துறைனர் பணி இடைநீக்கம்!

by admin

காவற்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடக்கு பாணந்துறை காவற்துறை உப காவற்துறைப் பரிசோதகர் ஒருவரும் மற்றும் சார்ஜென்ட் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என, காவற்துறையின் ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவற்துறை வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்ததில் நேற்றைய தினம் (06.06.21) உயிரிழந்திருந்தார்.

வடக்கு பாணந்துறை, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு காவற்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (06) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More