வாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப-குழு, கடந்த 9ஆம் திகதியன்று கூடிய போது, அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகிய மூன்று ராஜபக்ஸகளும் இருந்தனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவர்கள் மட்டுமன்றி, அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகபெரும, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டதானும், இராஜாங்க அமைச்சர்களான அஜிட் நிவாட் கப்ரால், லசந்த அழகிய வண்ண ஆகியோரும் பங்கேற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் நாட்டின் முக்கிய விலைவாசி உள்ளிட்ட வாழ்க்கை செலவு குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.