
சிரியாவின் துருக்கி ஆதரவு படைகள் கட்டுப்பாட்டில் உள்ள ஹதே பகுதியின் அப்ரின் நகர வைத்தியசாலையில் 2 ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் மற்றும் நோயாளிகள் என 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் பல்வேறு பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதனை இதுவரை கண்டறியவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் குர்தீஸ் படையினரே இத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அரசுபடைகளே ஏவுகணைகளை வீசியதாக அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள துருக்கி ஆதரவு படையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add Comment