குளோபல் தமிழ் செய்தியாளர்
நாட்டின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் இன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பு கோட்டை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
7,782 படையினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின பேரணி இடம்பெறவுள்ளது. நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.