எரிபொருள்களின் விலையேற்றத்தை கடுமையாக கண்டித்துள்ள, சில ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் , நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் தோளில் மீது சுமத்துவதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண மற்றும் எம்.பிக்களான அத்துரலிய ரத்ன தேரர், ஏ.எல்.எம். அத்தாவுல்லா, முன்னாள் எம்.பியான டிரான் அலஸ், மற்றும் ஜி. வீரசிங்க (ஸ்ரீ லங்கா கொமினியூஸ்ட் கட்சி), அசங்க நவரத்ன ( ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி) ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.