இலங்கை பிரதான செய்திகள்

முல்லைத்தீவில், மக்களின் விவரங்களை திரட்டும் காவற்துறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்
நடவடிக்கையில், காவற்துறையினர், நேற்று (14.06.21) ஈடுபட்டனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட
குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம்
வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், காவற்துறையினரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க காவற்துறை கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை என, அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.