147
தெகிவல மிருககாட்சிசாலையில் சிங்கம் ஒன்று கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை தொடா்பில் இதுவரையில் சரியான முறையில் உறுதி செய்யப்பட்டவில்லை என்ற போதிலும் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை அங்கு மேலும் இரு மிருகங்கள் திடீரென உயிர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வௌியாகி உள்ள நிலையில் அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love