தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகின்றதனைத் தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
அதன் முயற்சியாக மார்ச் முதல் கொரோனா தடுப்பூசிகள் போடுவது தீவிரமடைந்து வருகின்ற நிலையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்லுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்களா அல்லது சிறைக்குச் செல்கிறீர்களா என நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா் .
11 கோடி மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரை 1.95% பேருக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
கொரோனா தடுப்பு மருந்தை அதிகளவி-ல் செலுத்திக் கொண்ட இஸ்ரேல், அமெரிக்கா, ஜோ்மனி ,பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது