ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சீனா, லெபனான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள், 13 நபர்களை குறிவைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 7 முஸ்லீம் நாடுகளுக்கு தடை செய்தமைக்கு பதிலடியாக அமnரிக்கர்கள் ஈரானுக்குள் நுழைவதற்கு ஈரான் அரசு தடைவிதித்திருந்ததுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்திருந்துமிருந்தது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது.
இந்தநிலையில் ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.