முதல் முறையாக யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இத்தாலி அணியுடன் போட்டியிடவுள்ளது.
நேற்றையதினம் லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க் அணியை 1-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி உறுதி செய்தது
டந்த 1966-ம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குப்பின், பெரிதாக எந்த முக்கிய போட்டிகளிலும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறாத இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கிண்ண இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளது.
இதற்கு முன் இங்கிலாந்து அணி, கடந்த 1968, 1990, 1996, 2018 ஆகிய ஆண்டுகளில் யூரோ கிண்ணப் போட்டியில் அரையிறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்தது. அதிலும் 1990, 1996, 2018ம் ஆண்டுகளில் நடந்த போட்டியில் அரையிறுதியில் பெனால்டி சூட் முறையில் இங்கிலாந்து வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது