வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. வாக்கெடுப்பு மாலை 5.30க்கு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என நேற்றையதினம் சபையில் நேற்று உரையாற்றிய போது வினோநோகராத லிங்கம் அறிவித்துள்ளாா்.
மேலும் ஜேவிபியும் இதனை ஆதரிக்கவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தீர்மானத்தை இதுவரை அறிவிக்கவில்லை.
எரிபொருள்களின் விலையேற்றத்தினை அடுத்து குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது