லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 குழந்தைகள் , 20 பெண்கள் உட்பட 57 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். மேலும் கடலில் தத்தளித்த 18 போட மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சி நகரில் இருந்து ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த 75 பேருடன் சென்ற புறப்பட்ட படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் பொிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அடைக்கலம் தேடி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் வாயிலாக புலம் பெயர்கின்ற போது பல்வேறு காரணங்களால் அடிக்கடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு அதிகளவு உயாிழப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது