315
கல்கிசை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை பாலியல் தேவைகளுக்கு விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்திய 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம், தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ள்ளது.
குறித்த இணையத்தளங்களுக்கு தடைவிதிக்குமாறு, சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற இணையத்தளங்களுக்கு தகவல்களை பதிவேற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் குற்றச்செயலாகும் எனவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love