187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏமனில் கப்பல் ஒன்றில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்த எட்டு இலங்கையர்கள் சிக்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. சிக்கியிருந்த இலங்கையர்களை மீட்பதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உள்நாட்டு போர் காரணமாக வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love