ஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் தாதி ஒருவா் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்பது தொடா்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில்,8,557 முதியவா்களை களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கு கடற்கரை அருகே உள்ள ப்ரீஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றிலேயே இவ்வாறு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக உப்புக்கரைசலை குறித்த தாதி செலுத்தியுள்ளதாக தொிவித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 6 பேருக்கு மட்டுமே இவ்வாறு உப்புக்கரைசல் ஊசி போடப்பட்டதாக நம்பப்பட்ட போதும் தற்போது அதிகமானோருக்கு தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தியிருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு தடுப்பூசி மருந்துக்குப்பி கைதவறி விழுந்து உடைந்துவிட்டதாகவும், அதை மறைக்க 6 பேருக்கு உப்புக்கரைசல் செலுத்திவிட்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் குறித்த தாதி ஒப்புக்கொண்டதாகவும் எனினும் காவல்துறை விசாரணையில் இன்னும் அதிகமானோருக்கு தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தியிருப்பது தொிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஜெர்மனியில் பல தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில் குறித்த தாதியின் செயல்பாட்டுக்கு அரசியல் நோக்கம் இருக்கின்றதா என்பது குறித்தும் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
.