உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலின்படி எமது நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் உமாசுதன் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இலங்கையானது கொரோனாத் தொற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றது. அன்றிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களுக்கான அறிவுறுத்தல்களையும் விழிப்புணர்வுகையும் காலத்திற்கு காலம் வழங்கி வருகின்றது
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலின்படி எமது நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளது.
இதிலிருந்து மீண்டுவர சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.டெல்டா திரிபு வைரஸ் பரவலிலும் அபாய கட்டத்தை எமது நாடு அடைந்திருக்கிறது.
சுகாதார அமைச்சு அமைச்சின் தகவலின் படி இதுவரை 14.5 வீதமானவர்கள் இரண்டு டோஸையும் 11.5 வீதமானவர்கள் ஒரு டோஸையும் பெற்றுள்ளனர்.18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70 வீதமான இரண்டு டோஸைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே நாங்கள் இந்த நோய் வீரியத்திலிருந்து நாங்கள் விடுபட முடியுமென முற்றுமுழுதாக நம்புகிறோம்.
நாடு முழுவதும் அயராது வைத்தியர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் வைத்தியத் துறை சார்ந்த இதர சுகாதார அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தாலும் நாங்கள் எமது மக்களுக்கான சேவையை வழங்க வழங்குவதிலிருந்து பின்நிற்கவில்லை. யாழ் போதனா வைத்தியசாலையும் முன்னுதாரணமாக செயற்படுகிறது என்றார்