யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் காவல்துறையினா் திடீர் வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் , வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில் , யாழ்ப்பாண காவல்துறையினா் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது , அநாவசியமாக வீதியில் நடமாடியோர் பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன் அவர்களின் விபரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை , அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.