Home இலங்கைகாங்கேசன்துறையில் வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

காங்கேசன்துறையில் வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

by admin

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றில் இருந்து முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 


குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினா் சடலத்தை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். 


குறித்த முதியவர் சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார் எனவும் , அதனால் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாகவும் , சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More