216
கொரோனா பெரும் தொற்று காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுள் பக்தர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலய வாசலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கான சிறப்பு ஏற்பாட்டினை ஆலயத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
ஆலயத்திற்கு முன்பாக உள்ள வில்லு மண்டப வாயில் முகப்பில் பலிபீடம் மற்றும் மயில் என்பன வைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபட்டு , பலிபீடத்தை தொட்டு வணங்கி மலர் தூவி வழிபட கூடியவாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Spread the love