சிரியாவில் காட்டுத்தீயை வேண்டுமென்றே பரப்பிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் திடீரென பரவிய காட்டுத்தீ பக்கத்திலுள்ள 3 மாகாணங்களுக்கு பரவியது.
இதனால் அந்தந்த பகுதி யிலுள்ள காட்டுப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் காட்டை விட்டு வெளியேறினர்.. எனினும் இந்த காட்டுத்தீயானது பெருத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது..
பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட 187 காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும் 32 ஆயிரம் ஏக்கர் காட்டில் உள்ள விவசாய நிலங்கள் அழிந்ததுடன் 370 வீடுகள் எரிந்து சாம்பலாயின எனவும் அந்த நாட்டு அரசு செய்தி வெளியிட்டது.. மேலும் இந்த காட்டுத்தீயில் 3 பேர் உயிாிழந்திருந்ததாகவும் தொிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த காட்டுத்தீ ஏற்பட என்ன காரணம் என்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் காட்டுத்தீ வேண்டுமென்றே பரப்பப்பட்ட ஒன்று எனவும், அதில் 24 பேர் சம்பந்தப்பட்டதாகவும் தொிவித்த காவல்துறையினா் அவா்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினா்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இதுவரை தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில் குறித்த 24 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.. நீதிமன்ற உத்தரவையடுத்து, 24 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரியா நீதித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. வழக்கமாக, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது பொதுவானது என்றாலும், காட்டுத் தீ விவகாரத்துக்காக 24 பேருக்கு மரண தண்டனை என்பது இப்போதுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது.