166
யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே பலபகுதிகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்லுண்டாய், நாவாந்துறை,அச்சுவேலி போன்ற பகுதிகளிற்கு பயணம் செய்த மாவட்ட செயலர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
Spread the love