Home உலகம் சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவி விலகினார்.

சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவி விலகினார்.

by admin

சுவீடனின் முதல் பெண் பிரதமரான மக்டேலேனா அண்டர்சன் அவா் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள அவா் எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாம் ஒரே கட்சியின் ஆட்சியில் தான் பிரதமர் பதவியை வகிப்பேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று சுவீடனின் சட்ட நடைமுறைப்படி அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கை பெற்று மக்டெலெனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவீடனின் பெண் வாக்காளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 100 வருடங்களுக்கு பின்னா் 54 வயதாகும் சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மக்டேலேனா அண்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More