நுவரெலியா தலவாக்கலை அக்கரபத்தனை வூட்வில் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 150 தனி வீடுகளை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன இன்று திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வுகளில் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க¸அமைச்சர்களான பழனி திகாம்பரம் மனோகணேசன்¸பைசர் முஸ்தபா¸அர்ஜின ரணதுங்க¸இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமர்ர்¸மயில்வாகனம் திலகராஜ்¸வேலு குமார் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது மக்களிடம் வீடுகளுக்கான உரிமைப்பத்திரம் கையளிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான அனுமதி கடிதமும் சமுர்த்தி பயனாளிகளுக்கான கடன் தொகைக்கான கடிதமும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது. பெருந்தோட்ட வீடமைப்பு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை நினைவு கூறும் வகையில் விசேட முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.