Home இலங்கைசர்வதேச மீன்பிடி படகொன்றிலிருந்து 250kg போதைப்பொருள் மீட்பு

சர்வதேச மீன்பிடி படகொன்றிலிருந்து 250kg போதைப்பொருள் மீட்பு

by admin

சர்வதேச மீன்பிடி படகொன்றில் இருந்து 250 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 09 பாரிய பொதிகளில் 225 சிறிய சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய புலனாய்வு தகவலுக்கு அமைய, காவல்துறைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுடன் இணைந்து சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்ட நிலையில் இலங்கையில் 900 கடல் மைல்கள் (சுமார் 1665 கிலோமீற்றர்) தென் கடற்பரப்பில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறைப் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More