பிரித்தானியாவில், கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒமிக்ரோனால் பதிவான முதல் மரணமாக இது கருதப்படுகிறது.
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு பதிவானதாகவும், இந்தப் பிறழ்வு விரைவில் லண்டனில் ஆதிக்கம் செலுத்தும் எனவும், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் லண்டன் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இந்த வீதம் அதிகரித்து வருவதாகக் கூறிய பிரதமர், இது பயப்படுவதை விட லேசானது என்று அறிக்கைகள் வந்தாலும் அது தொற்றாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.