ஜேவிபியுடன் எதிர்காலத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவ்வாறான சாத்தியக்கூறுகளை ஜேவிபி இன்று நிராகரித்துள்ளது.
இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள, ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா,
இரண்டு பிரதான கட்சிகளுடனும் அல்லது இரண்டு பிரதான கட்சிகளில் ஒரு பகுதியாக இருந்த எவருடனும் தாம் இணையத் தயாராக இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
இரண்டு பிரதான கட்சிகளிலும் அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக்கொண்டு, நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றவர்களுடன் கைகோர்க்க ஜேவிபி தயாராக இல்லை எனவும் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள் அரசாங்கம் சிக்கலில் இருக்கும்போது தப்பிக்க வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். மூழ்கும் கப்பலை கைவிடுபவர்களை அனுமதிக்கப்போவதில்லை. இரண்டு பிரதான கட்சிகளிலும் இருந்தவர்கள் மற்றும் நாட்டின் அழிவுக்கு பங்கம் விளைவித்தவர்களுடன் ஜே.வி.பி.க்கு எந்த தொடர்பும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், இந்தத் தோல்வியுற்ற அரசியல் கட்டமைப்பை உண்மையில் மாற்ற விரும்பும் மக்களுக்கும், பிரதான கட்சிகளின் மாகாண மட்ட உறுப்பினர்களுக்கும் ரில்வின் சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.