215
பங்களாதேசில் இன்று காலை மூன்றடுக்கு படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் தெற்கு பகுதியில் தலைநகர் தோகாவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் ஓபிஜான் 10 என்கிற மூன்றடுக்கு கொண்ட படகில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பியுள்ளனர் எனத் தொிவிக்கப்படும் அதேவேளை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Spread the love