Home இலங்கைறஞ்சனின் காதலியுடன், S.B திஸ்ஸநாயக்கா சிறைச்சாலை சென்றார்!

றஞ்சனின் காதலியுடன், S.B திஸ்ஸநாயக்கா சிறைச்சாலை சென்றார்!

by admin

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்க பார்வையிட்டுள்ளார்.

“தான், ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். சுமார் அரை​மணிநேரம் அவருடன் உரையாடியிருந்தேன். நான் தனியாக செல்லவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் சென்றிருந்தேன். காதலி ஒரு வைத்தியர், அவர், தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். என்னுடன், என்னுடைய ஊடகச் செயலாளரும் வருகைதந்திருந்தார்” என்றும் எஸ்.பி. திஸாநாயக்க தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்திருந்தார்.

“ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடவில்லை. எனினும், பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதியிடம் வலியுறுத்தமுடியும். அந்தவகையில், இதுதொடர்பில் நான், சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார். அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், அந்த சிறையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More