Home இலங்கையாழ்.போதனாவில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு!

யாழ்.போதனாவில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு!

by admin

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண் மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப பெண் இன்றைய தினம் வியாழக்கிழமை , சிகிச்சையின் நிமித்தம் , “எக்ஸ்ரே” எடுப்பதற்காக சென்ற போது , தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி , தனது கைப்பையினுள் (ஹாண்ட் பாக்) வைத்து சென்றுள்ளார். 


திரும்பி வந்த கைப்பையினை பார்த்த போது , அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை கண்ணுற்று , வைத்திய சாலை நிர்வாகத்திடம் , முறையிட்டுள்ளார். 
நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலை காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு , வைத்திய சாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது.

 
தினமும் வைத்திய சாலைக்கு பெருமளவானோர் , பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால் , சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ,வைத்திய சாலை நிர்வாகம் கோரியுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More