Home இலங்கைஇரவில் மானவடு மாற்றம் – வவுனியாவில், பட்டாசு கொழுத்தி ஆரவாரம்!

இரவில் மானவடு மாற்றம் – வவுனியாவில், பட்டாசு கொழுத்தி ஆரவாரம்!

by admin

வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நேற்று (05.01.21) இரவோடு இரவாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது விடுதி பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரியாக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி முதல் செயற்பட்டு வந்த, பீ.பீ.மானவடுவுக்கு, உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேவை கருதிய அவசர இடமாற்றமாக குறித்த இடமாற்றம் இரவோடு இரவாக வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது விடுதி முன்பாக, இரவு இனந்தெரியாத நபர்களால் பட்டாசுகள் கொழுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, அவரது விடுதிக்கு காவற்துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More