Home இலங்கை ATM இயந்திரத்தில் 7இலட்சத்து 50ஆயிரம் கொள்ளையிட்ட சந்தேகத்தில் சுழிபுரம் வாசி கைது

ATM இயந்திரத்தில் 7இலட்சத்து 50ஆயிரம் கொள்ளையிட்ட சந்தேகத்தில் சுழிபுரம் வாசி கைது

by admin

யாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரை காவல்துறை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வங்கியின் ATM இயந்திரத்தில் இருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.  அது தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர். 


அந்நிலையில் சந்தேகநபரை அடையாளம் கண்டிருந்த காவல்துறையினா் , நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர் , சுழிபுரம் மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் , அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும்காவல்துறையினா்தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More