Home இலங்கைஉயிரை மாய்க்க முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு

உயிரை மாய்க்க முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு

by admin

மாமன் கண்டித்ததால் , தன் உயிரை மாய்க்க முயன்ற மாணவனுக்கு எதிராக காவல்துறையினா் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடிகளை வாங்கி வெடிக்க வைத்துள்ளார். அதனை கண்ணுற்ற மாணவனின் மாமன் மாணவனை கண்டித்துள்ளார். 


அதனால் ஆத்திரமுற்ற மாணவன் தோட்டத்திற்கு சென்று கிருமி நாசினியை எடுத்து அருந்தி உள்ளார். அதனை அறிந்த குடும்பத்தினர் மாணவனை சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 


வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் தற்போது தேறி வரும் நிலையில் , தனது உயிரை மாய்க்க முயன்ற குற்றத்திற்கு எதிராக காவல்துறையினா் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More