148
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை (12.01.22) வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வடக்கு மாகாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான இன்று காலை காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
Spread the love