தாக்குதல்தாரியிடமிருந்து தப்பித்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தியேந்திய அந்த தாக்குதல்தாரி பாதிரியாரின் கழுத்தை அறுப்பதற்கு முன்னர் எவ்வாறு அவரை மண்டியிட மிரட்டினார் என விவரித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த, அந்த தேவாலயத்தின் பங்கு உறுப்பினர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
போலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், கத்திகளை ஏந்திய அந்த தாக்குதல்தாரிகள் பலரைப் பணையக் கைதிகளாக சுமார் ஒரு மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.
அந்த இரண்டு தாக்குதல்தாரிகளும் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு தேவாலயத்தில் பல பேரை பணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
தாக்குதாரிகளில் ஒருவர் தேவாலயத்தின் அருகாமையில் வசித்து வந்ததாகவும் கடந்த வருடம் சிரியாவில் அவர் ஐ.எஸ் அமைப்பில் சேர முயற்சித்ததை அடுத்து மின்னணு கைப்பட்டை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தார் எனவும் உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலிஸார் சிலரைக் கைது செய்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிகாதி அனுதாபி ஒருவர் நீஸ் நகரில் டிரக்கை ஓட்டிச் சென்று 84 பேரைக் கொன்ற சம்பவம் நடந்து இரண்டு வாரத்தில், இந்த தாக்குதல் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.