Home இலங்கை “என்னை கைது செய்ய முடியாது” “டயனாவுக்கு தலையில் பிரச்சனை” “பிறரிடம் இருந்து உண்ணுகிறோம்”

“என்னை கைது செய்ய முடியாது” “டயனாவுக்கு தலையில் பிரச்சனை” “பிறரிடம் இருந்து உண்ணுகிறோம்”

by admin

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்னை சிறையில் அடைப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தாம் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது எனவும் “என்னை சிறையில் அடைக்க எந்த காரணமும் இல்லை. அது பொய். எந்த ஆதாரமும் இல்லை.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனாதிபதியின் அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து ஜனாதிபதிதான் முதலில் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் காலத்தை குறைத்த ஒருவன்தானே. நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தது அவரது கருத்து. அவருக்கு தலையில் ஏதோ பிரச்சினை உள்ளது என நினைக்கிறேன்.”

“நாம் பிறரிடம் இருந்து உண்ணும் தேசமாக மாறியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அதனால் நமக்கு நாமே உணவு தயாரிக்கும் நிலைக்கு வர வேண்டும்.” எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More