Home உலகம்பூஸ்டருக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு தடுப்பூசி

பூஸ்டருக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு தடுப்பூசி

by admin

கொரோனாவின் வெவ்வேறு உருமாற்றங்களில் இருந்தும் மக்களைக் காக்கும் வகையில் உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வரும் நிலையில் இதற்கு மாற்றாக ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்துவதைப் பரிசீலிக்கலாம் என பைஸர் நிறுவனத்தின் சிஇஓ அல்பர்ட் போர்லா (Albert- Bourla ) பரிந்துரை செய்துள்ளாா்.

இஸ்ரேலின் செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய நோ்காணலிலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா். , 4, 5 மாதங்களுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்துவது நல்லது இல்லை என்பதனால் இதற்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மக்களும் அதைப் பின்பற்றுவர். எளிதில் நினைவில் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வர். மேலும் பொது சுகாதாரப் பார்வையிலும் இதுவே சிறந்த நடைமுறையாக இருக்க முடியும். ஆகையால், ஒமைக்ரான் வைரசுக்கு எதிராகவும் போராடக் கூடிய தடுப்பூசியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தொிவித்துள்ளாா்.

மேலும் பைஸர் நிறுவனத்தினால் மீள்வடிவமைக்கப்பட்ட புதிய தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்று அதை சந்தைக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை மார்ச் மாதம் தொடங்கி தயாரிக்கவுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

இதேவேளை அமெரிக்காவின் தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம், மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக 90% பாதுகாப்பை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அதேவேளை இஸ்ரேலின் ஷீபா மருத்துவ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4வது டோஸ் தடுப்பூசி மூன்றாவது டோஸைக் காட்டிலும் அதிகமான எதிா்ப்புசக்தியை தருகிறது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More