அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பின்னா் தங்களது சொந்த நாட்டில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இரண்டு முறை கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டம் வென்றவரும், தற்போதைய உலகின் முதலாம்தர வீராங்கனையுமான அஷ்லிக் பார்ட்டி, இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை எதிர்கொண்டு 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளாா்.
. 1980-ல் முன்னாள் அவுஸ்திரேலிய வீராங்கனையான கிறிஸ் ஓ நெயில் கடைசியாக அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். அதன்பிறகு எந்த வீராங்கனையும் பட்டம் வெல்லவில்லை
42 ஆண்டுகால அவுஸ்திரேலியாவின் காத்திருப்புக்கு முடிவு கட்டி கிண்ணத்தினை வென்ற அஷ்லிக் பார்ட்டிக்கு இது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் ஆகும். இதற்கு முன்னதாக 2019 பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2021 விம்பிள்டன் என்று இரண்டு கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தககது