166
யாழ்.கரவெட்டி – பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள வயலில் தனது சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
Spread the love