152
யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் காவல்துறையினா் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்
Spread the love