190
ஊர்காவற்துறையில் நகைகள் கோழி என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுருவில் மாதா பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை புகுந்த திருடன் 48 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 1500 ரூபாய் பெறுமதியான சேவல் ஒன்று என்பனவற்றை களவாடி சென்றுள்ளார்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
Spread the love